விவசாயிகள் உதவி வேண்டும் என்போர்

விவசாயிகள் உதவி வேண்டும் என்போர்


உயிர் வாழ உண்ண உணவு தரும் விவசாயிகளே வணக்கம் .
எங்களின் அமைப்பின் சார்பில் உங்களுக்கு சிறிய அளவில் உதவிட முயற்சி செய்துள்ளோம் .இன்றைய காலகட்டத்தில் மாணவர்களாகட்டும் அரசு அதிகாரிகளாகட்டும் தனியார் துறையில் வேலை செய்பவர்களாகட்டும் சினிமா துறையை சார்ந்தவர்களாகட்டும் தொழிலதிபர்களாகட்டும் வெளிநாட்டில் வாழும் தமிழர்களாகட்டும் மற்றும் அனைத்து துறைகளை சார்ந்தவர்களாகட்டும் அனைவர்களுக்கும் விவசாயிகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டு . அதை எப்படி நேரடியாக செய்ய வேண்டும் என்ற குழப்பம் .இந்த அமைப்பின் மூலமாக நீங்கள் உங்கள் தேவைகளை பதிவு செய்யுங்கள் .அதை நாங்கள் உதவி செய்யும் நல்ல உள்ளங்களுக்கு விளம்பரத்தின் உதவியோடு அவர்களின் பார்வைக்கு கொண்டு செல்வோம்.அவர்கள் செய்யும் உதவி உங்களை நேரடியாக வந்து சேரும் .( உதாரணமாக ஒரு விவசாயி 2 லட்சம் ரூபாய் கடன் என்று பதிவு செய்திருந்தால் அவரை எங்கள் அமைப்பின் உறுப்பினர் மூலமாக அந்த விவசாயின் நிலைமையை முழுமையாக தெரிந்து கொண்டு எங்கள் பதிவேட்டில் பதிந்து வைப்போம் . அவருக்கு பல நபர்கள் மூலமாக அவர் கேட்ட தொகை கிடைத்த பிறகு எங்கள் பதிவேட்டில் இருந்து எடுத்துவிடுவோம்.அதே விவசாயி விவசாயம் செய்து கடன் பட்டால் மீண்டும் இதில் பதிவு செய்யலாம் . அதற்க்கு தனி கட்டணம் எதுவும் இல்லை. ) இது புதிய முயற்சி .நாட்டில் நல்ல உள்ளங்கள் நிறைய உண்டு .உங்களுக்கு உதவி செய்வார்கள் . இனி எந்த விவசாயியும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம் .

இந்த அமைப்பின் உறுப்பினர் கட்டணம் : 100 ரூபாய் /-

VPP பார்சலில் உங்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் .உங்கள் கைகளுக்கு அடையாள அட்டை கிடைத்த பிறகே பதிவு செய்யப்படும் .